1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (13:58 IST)

இந்தியர்கள் குடும்பத்துடன் டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பது எப்போது?ஆய்வில் தகவல்

Tv watching
இந்தியர்கள்  97 சதவீதம் பேர் இரவு உணவு உண்ணும்போது தங்கள் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதை விரும்புவதாக  ஒரு  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்த நிலையில்,  இந்தியர்கள் தங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகள், மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் நிகழ்ச்சி பற்றிய ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியர்கள்  97சதவீதம் பேர் இரவு உணவு உண்ணும்போது தங்கள் குடும்பத்துடன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்ப்பதை விரும்புவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியை அதிகம் பார்க்க விரும்புவதாகவும், இதற்கு அடுத்து, விளையாட்டு நிகழ்ச்சிகளையும், த்ரில்லர்,. காதல், வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை பார்ப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.