செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (14:22 IST)

டி 20 போட்டியில் விளையாடும் போது அதைப் பற்றி கவலையே படக் கூடாது… ரோஹித் ஷர்மா தத்துவம்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்ததால் இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்களை 22 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. அந்த நிலையில் இருந்து அணியை 212 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றார் ரோஹித். இந்த சதம் அவர் சர்வதேச டி 20 போட்டிகளில் அடிக்கும் ஐந்தாவது சதமாகும். இதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மேக்ஸ்வெல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நான்கு சதங்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டி 20 போட்டியில் அதிரடியாக விளையாடுவது பற்றி பேசியுள்ள ரோஹித் சர்மா “டி 20 போட்டிகளில் விளையாடும் போது நாம் அவுட் ஆவது குறித்து கவலைப்படாமல் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.