திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (21:54 IST)

கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான லட்டு: பக்தர்கள் மகிழ்ச்சி

Laddu
திருப்பதி சென்றால் பக்தர்கள் தவறாமல் வாங்கி வருவது லட்டு பிரசாதம் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் நேற்று முதல் லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதற்காக சுமார் 3000 திருப்பதியில் இருந்து கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி இலவச லட்டு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு  நேற்று லட்டு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு லட்டு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்கள் தொடங்கி வைத்தார்
 
ஏற்கனவே சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி லட்டு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva