1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (19:12 IST)

திற்பரப்பு அருவி அருகே ஒரு சிறப்பு வாய்ந்த சிவாலயம்.. முழு தகவல்கள்..!

சுற்றுலா பயணிகளையும் மனதை கவர்ந்த திற்பரப்பு அருவி அருகே பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று இருக்கும் நிலையில் இந்த கோயிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
 
திற்பரப்பு  அருகே அருகே அமைந்திருக்கும் மகாதேவர் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என்றும் இந்த கோயிலின் மூலவர் வீரபத்திரர் என்றும் சிவலிங்க வடிவில் அவர் காட்சி தருகிறார் என்றும் கூறப்படுகிறது.
 
அதே போல் இந்த கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு மூலவருக்கு எதிரில் நந்தி இல்லாமல் சற்று விலகி காணப்படும் கோதை ஆற்றின் கரையில் திற்பரப்பு அருவி தெற்கு திசையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது என்றும் தெரிகிறது.
 
 சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் நான்கு புறமும் 15 அடி உயரத்தில் கருங்கல் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு வாசலில் மணிமண்டபம் மேற்கு பிரகாரத்தில் சாஸ்தா கோயில் ஆகியவை அமைந்துள்ளது.
 
இந்த கோவிலில் பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில்   கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் சிறப்பு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தில்   இந்த கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran