1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (11:29 IST)

சென்னையில் மலர் கண்காட்சி - கட்டணம் நிர்ணயம்!

ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 
வருகிற ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் முதல் முறையாக தோட்டக்கலைத் துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 
 
ஆம்,  ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் வேளாந்துறை அமைச்சர் எம்.ஏர்.கே. பன்னீர் செல்வவம். மலர் கண்காட்சியை பார்வையிட பொது மக்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  மலர் கண்காட்சிக்காக  ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனேவில் போன்ற இடங்களில் இருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.