புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (08:27 IST)

ஃபுல் மப்பு.. டிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய நடிகை..?

நடிகை பூஜா ஹெக்டே போதையில் கார் ஓட்டி டிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் போலீஸில் சிக்கியதக செய்தி வெளியாகியுள்ளது. 
 
நடிகை பூஜா ஹெக்டே டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருபவர். இவர் தமிழில் நடிகர் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  

தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ள இவரின் நடிப்பில் மகரிஷி என்ற படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ளார். 
 
நடிகை பூஜா ஹெக்டே குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கினார் என்று செய்தி வெளியானது. மேலும், குடிபோதையில் இருந்த பூஜாவை வேறு ஒரு காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டார் அவரின் மேனேஜர் ஹரி என்று செய்தி தெரிவித்தது. 
இந்நிலையில் இந்த செய்தியை மறுத்தும் இதற்கு விளக்கம் அளித்தும் பூஜா ஹெக்டேவின் மேனேஜர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பூஜா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. அவருக்கு இரவு ஃபிளைட் என்பதால் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறி படத் தயாரிப்பு குழு காருடன் டிரைவரை அனுப்பியது. 
 
பூஜா மீது தேவையில்லாமல் வந்த இந்த வதந்திக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை என கூறியுள்ளார்.