வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (23:30 IST)

முதல்வரின் பயோபிக் படம்....நடிகர் இவர்தான்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை படமாக ஆகிறது.

ஆந்திரமாநிலத்தில்        முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி         ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மிகவேகமாக மக்களின் குறைகளைக் கேட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்     ஆந்திரமாநில முதல்வர்களில் அதிக மக்கள் செல்வாக்கு படைத்த ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது.இதில் மம்முட்டி சிறப்பாக நடித்திருந்தார்.இப்படத்தின் பெயர் யாத்ரா ஆகும்.

தற்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து யாத்ரா படத்தின் இரண்டாம் பாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் ப்ரதிக் காந்தி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனஏ   ஸ்கேம் 1992 ஹர்சத் மேத்தா ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.