நான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான் - ’ஆடை’ புகழ் அமலாபால் உருக்கம் !

amalapaul
Last Updated: புதன், 17 ஜூலை 2019 (19:31 IST)
சமீபத்தில் ஆடை என்ற படத்தில் டிரெயிலர் வெளியானது. இதில்  நடித்து உள்ள அமலாபாலுக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முக்கியமாக இந்தக் கதையை அவர் தேர்ந்தெடுத்த துணிச்சலுக்காகவே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.ஆனால் இதே படத்திற்காகத்தான் அவரது அடுத்த படத்திற்காக வாய்ப்பு பறிபோனதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தற்போது ஆடை படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக பேசி வருகிறார்.
இயக்குனர் சாமியால் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான அமலாபால், அடுத்து மைனா,தலைவா , உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
 
இந்நிலையில் தற்போது ஆடை படத்தின் புரொமோஷனில் அவர் கூறியுள்ளதாவது : நான்  எனது காதலரை கலந்தாலோசித்த பிறகுதான், படங்களைத் தேர்வு செய்கிறேன். அவரது ஊக்கம்தான் என்னை பல மடங்கு உயர்த்தியுள்ளது.  மேலும் எனது காதலரை குறித்த தகவல்களை அடையாளத்தை என்னால் தற்போது கூற முடியவில்லை. ஆனால் நான் சினிமாவில் உயரக் காரணமே அவர்தான்! அவரது ஊக்கமே என்னை உயர்த்தியுள்ளது. தன்னை மெழுகாக தியாகம் செய்து என்னை முன்னேற்றுகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 
அதேசமயம் தற்போது அமலாபாலின் போட்டோ ஒன்று வைரலாகிவருகிறது.  போட்டோவில் ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி அந்த புகைப்படத்தில் உள்ளது. எனவே இவர்தான் அந்த காதலராக இருக்குமோ என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :