உண்ணாவிரதப்போராட்டத்தினை தொடர்ந்து நடத்திவரும் வேளாளர் கூட்டமைப்பினர்
சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தினை இரவு முதல் துவக்கிய வேளாளர் கூட்டமைப்பினரினால் தமிழக அளவில் பெரும் பரபரப்பு –கொங்குவேளாளர் மற்றும் சோழிய வேளாளர் உட்பட 40 உட்பிரிவுகள் கொண்ட வேளாளர்கள் பெயரை மாற்ற முயற்சித்த தமிழக அரசிற்கும், மத்திய அரசிற்கும் கண்டனம் கரூர் மையப்பகுதியில் உள்ள 80 அடி சாலையில் திங்கள் கிழமை இரவு 10 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தினை அனைத்து வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பினர் துவங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் த.கார்வேந்தன் தலைமையில் துவங்கிய இந்த உண்ணாவிரத்தினை கரூர் வ.உ.சி பேரவையின் தலைவர் மணீஸ் கே.மகேஷ்வரன் துவக்கி வைத்தார்.
கரூர் 80 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அலுவலகத்திற்குள் நடைபெற்று வரும் இந்த தொடர் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும் எங்களது ஒரே கோரிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பானது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்தது ஆனால் அதை வைத்து கொண்டு அன்று எடுத்த கணக்கினை வைத்து அதே மாதிரியான ஒரு செயலை செய்வது எப்படி, ஆகவே அரசு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி நன்கு உணர்ந்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றதோடு, வரும் தேர்தலில் எங்கள் பங்கும் எப்படி என்பதனை இந்த உண்ணாவிரதப்போராட்டம் மூலம் மத்திய மற்றும் மாநில அரசிற்கு தெரியவரும் என்றார். இப்போராட்டம் 24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.