சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடி வருமானம் உயரும் - அமைச்சர் கட்காரி
சுங்கச் சாவடிகள் மூலமாக தற்போது, ரூ.38 000 கோடி வருமானம் கிடைத்து வருகிறதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளதாவது:
சுங்கச்சாவடிகள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடியாக வருமானம் உயரும் எனக் கூறியுள்ளார்.
மேலும், கொரோனாவை விட சாலை விபத்துகள் அதிக ஆபத்தானது என்றும், இந்தியாவில்தான் ஓட்டுநர் உரிமம் எளிதாகக் கிடைக்கிறது. இது நல்லது இல்லை என்று இன்று சென்னையில் நடந்துவரும் நிகழ்ச்சியின்போது, கூறினார்.