வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (23:00 IST)

மூதாட்டியின் காதை அறுத்து காதணி திருட்டு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் மூதாட்டியின் காதை அறுத்து காதணி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்ற பகுதி அருகே அமைச்சர் விஜய்பாஸ்கர் கலந்துகொள்ளவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியினர் தடபுடலாக கறி விருந்திற்கு ஏற்பாடு செய்தனர்.

அதனால் அந்த ஊர் மக்கள் அங்கு திரண்டர். கூட்ட நெரிசல் மிகுந்திருந்ததால் ஒரு மூதாட்டியின் காதை அறுத்து அவரது காதணியை திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.