செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (14:12 IST)

பிரபல ஜவுளிகடைக்கான உரிமம் ரத்து - ஐடி ரெய்டில் அதிரடி!

தமிழகத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக கண்டறியப்பட்டு கடந்த வாரம்  பிரபல ஜவுளி நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் 115 இடங்களில் நடந்த சோதனையில் 101 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. 
 
சென்னையில் இந்த சோதனை ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம், லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பிரபல ஜவுளி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகள் என மொத்தம் 74 இடங்களில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வரி ஏய்ப்பு செய்த பிரபல ஜவுளிகடைக்கான உரிமம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக வணிகவரி அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.