வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:39 IST)

அதிமுக பிரமுகர் வீட்டில் பறக்கும்படை ரெய்டு : அதிர்ச்சியில் அதிமுக

அனைத்துக் கட்சிகளும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். தேசிய அரசியலில் பாஜக - கங்கிரஸ் போன்று தமிழகத்தில் அதிமுக - திமுக கட்சிகள் உள்ளன.
தேர்தல் பரப்புரையின் போது இருகட்சியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவரை சராமரியாக வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.
 
சில நாட்களுக்கு முன்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
 
இதில் ரூ. 10 லட்சம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமான ஒருவரது இடத்தில் பலகோடி பணம் சிக்கியது. இது வாக்காளர்காளர்களுக்கு வழக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்று வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் இன்று  அதிமுக பிரமுகரின் ஒருவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு  விநியோகம் செய்ய பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவல் வந்தது.
 
இதனையடுத்து திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் அருகே சின்னமாத்தூரில் அதிமுக பிரமுகர் கிருஸ்ணவேணி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.