வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (19:55 IST)

ஹெச்.ராஜாவின் பதிவுக்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குநர்

drinker
தமிழ்நாடு அமைச்சர் முத்துசாமி, சமீபத்தில் ஒரு பேட்டியின் போது,, காலையில் மதுகுடிப்பவர்களை என்று சொல்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பாஜக முன்னாள் நிர்வாகி ஹெச்.ராஹா   தன் டுவிட்டர் பக்கத்தில், நேற்று இரவு சேலம் ரயில் நிலையத்தில் ஒரு குடிகாரன் குப்புற கிடந்தான். Sorry மந்திரி கோவப்பட போறாங்க.  மது பிரியர் குப்புற கிடக்கார்..என்று கிண்டல் பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் நவீன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ நீங்க ஆட்சி செய்யற மணிப்பூர்ல ஒரு பொண்ன நிர்வானமா தூக்கிட்டு போறானுங்க, அந்த ஊரே பத்தி எறியுது. மொத அத பாருங்க சார். இவன் போத தெளிஞ்சதும் தான எந்திரிச்சு போயிறுவான். என்னவோ போதைல மட்டையாகறவன் தமிழ்நாட்டுல மட்டுந்தான் இருக்கறமாரி. உபி குஜராத் அமேரிக்கா லண்டன்லயும் இருக்கானுங்க’’ என்று தெரிவித்துள்ளார்.

இவர், மூடர் கூட்டம், அக்னி சிறகுகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.