1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 20 ஜூலை 2023 (15:34 IST)

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்: முக்கிய குற்றவாளி கைது என தகவல்..!

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு  நிகழ்ந்த கொடூரம் சம்பந்தமான வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மணிப்பூரில் கடந்த மே மாதம் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில்  இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒருவர் கூட தப்ப மாட்டார்கள் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் மணிப்பூர் பெண்கள் கொடூர நிகழ்வுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஹேராதாஸ் என்பவர் அதான் முக்கிய குற்றவாளி என்றும் மணிபூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran