செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (18:00 IST)

நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி பரிசோதனை செய்த மருத்துவர்...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமண்டலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஒரு இளைஞர் தொண்டை வலிக்கு சிகிச்சை எடுக்க வந்துள்ளார்.

அப்போது, இளைஞரைப் பார்த்த மருத்துவர் பிரகாஷ் அவரை 10 அடி தூரத்திலேயே நிறுத்து வைத்து அவருக்கு பரிசோதனை செய்ததாகத் தெரிகிறது.

இந்தக் காட்சியை அருகில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில்  வீடியோ எடுத்து வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 
நோயாளியை 10 அடி தூரத்தில் நிறுத்தி வைத்து பரிசோதனை செய்த மருத்துவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.