வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூன் 2020 (07:24 IST)

ஒரு மாதத்தில் ஓய்வு பெறவிருந்த டாக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்களும் பலியாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஓய்வு பெற இந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் உள்ள லோக் நாயக் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த சீனியர் மருத்துவர் சரண்சிங் நேற்று கொரோனாவால் பலியானார். 59 வயதான இவர் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வந்தார். குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக அவர் கொரோனாவா; பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை செய்து அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்
 
இந்த நிலையில் மருத்துவர் சரண்சிங் அவர்களுக்கு கடந்த மே மாதம் 12ஆம் தேதி திடீரென கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்றிரவு அவர் மரணமடைந்தார். 59 வயதான டாக்டர் சரண்சிங் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வந்தவர் என்பதும் இம்மாதம் 30ஆம் தேதி அவர் ஓய்வு பெற இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது