செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (23:31 IST)

போடாத சாலைமீது சாலை போட்டதாக கணக்கு காண்பித்து பணம் பெற்ற ஒப்பந்த்தாரர்

The contractor who received the money by showing the account that the road was laid on the unpaved road
கரூர் மாவட்டத்தில் போடாத சாலைமீது சாலை போட்டதாக கணக்கு காண்பித்து பணம் பெற்ற ஒப்பந்த்தாரர் – நேற்று மனு கொடுத்து இன்று வேலையை ஆரம்பித்துள்ளவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி சுமார் 500 க்கும் மேற்பட்ட அதிமுக வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
 
 
தமிழக அளவில், கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே போடப்பட்ட சாலைகள் தரமானதாக உள்ள நிலையில்., அந்த சாலைகள் தற்போதைய திமுக ஆட்சியில் போடப்பட்டதாக ஒரு பொய்யான அறிக்கையை அனுப்பி அதன் மூலம் திமுக ஒப்பந்ததாரர் சுமார் ரூ 4 கோடி அளவிலான பணத்தினை முறைகேடாக வாங்கியுள்ளதாக நேற்று ஆர்பாட்டத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எந்தந்த சாலைகள் என்பதனை செய்தியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுடனும் சென்று அந்த சாலைகளை காண்பித்தும் தரம் நல்ல நிலையில் உள்ள அந்த சாலையானது, தற்போது மீண்டும் போடப்பட்டுள்ளதாக பொய் புகார் அறிக்கை தயாரித்து அதற்கு பில்லும் சேக்ஷன் ஆகியுள்ளதை ஆதரப்பூர்வமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் சுட்டிகாட்டி பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில், மீண்டும் ஒப்பந்த பணிகள் நடக்க கூடாது என்று அதிமுக கட்சி சார்பிலும், மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பிலும் புகார் மனு கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பகுதியில் இன்று தார்சாலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் அந்த தவறினை சுட்டிக்காட்டி, முன்னாள் அமைச்சர் நேற்று மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் அதே சாலையில் இன்று புதன்கிழமை காலை முதல் மாலை வரை பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சாலைகள் பரமாரிப்பு பணியில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் என்று ஏராளமானோர் ஒருங்கிணைந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முற்பட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுக்களாக அளித்து சென்றனர். அப்போது மாவட்ட கவுன்சிலரும், அதிமுக நிர்வாகியுமான திரு.வி.க.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அளவில் மிகவும் நூதனமான முறையில் ஒரு ஊழல் கரூர் மாவட்டத்தில் தான் நடந்தேறியுள்ளதை நேற்று எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஆதரப்பூர்வமாக மனு கொடுத்தார். மேலும், இது போன்ற நடவடிக்கைகள் தொடர கூடாது மேலும், நடக்க உள்ள நெடுஞ்சாலைப்பணிகளும் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தும், மீறியும், மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மீறலின் பெயரில் தற்போது அதிகரித்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆகவே இதை மேலும் ஒரு புகார் மனுக்களாக இன்று மீண்டும் கொடுத்துள்ளோம். ஆகவே ஊழல் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தினை நாட உள்ளதாகவும் தெரிவித்தார். பேட்டியின் போது அதிமுக நிர்வாகிகள் மல்லிகா சுப்பராயன், தானேஷ் என்கின்ற முத்துக்குமார், கமலக்கண்ணன், சரவணன், நெடுஞ்செழியன், வழக்கறிஞர் அணியினை சார்ந்த சுப்பிரமணியன், கரிகாலன் உள்ளிட்ட ஏராளாமனோர் உடனிருந்தனர்.