திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (19:16 IST)

சொத்துவரி உயர்வு எதிரொலி: வாடகையை உயர்த்தும் வீட்டு உரிமையாளர்கள்

rent
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக சென்னையில் சில இடங்களில் வீட்டு வாடகையை  வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது
 
சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வீட்டில் குடியிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.