புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:57 IST)

சொன்னதை செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் !

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கடுவதாக தமிழக நிதித்துறைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் ஆளும் கட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி தேர்தலின் போது, அக்கட்சி அறிவித்ததன்படி பெட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக்ராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என தமிழ்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தி அளித்த வாக்குறிதிகளில் பெட்ரோல் விலை குறைப்பை மேற்கொண்டுள்ளதாக இணையதளத்தில் பேசு பொருளாகி வருகிறது.