1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (14:34 IST)

எந்தெந்த துறைக்கு எவ்வளவு? தமிழக பட்ஜெட் ஒரு பார்வை!!

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனிடையே  தமிழக பட்ஜெட்டின் ஒரு பார்வை...

 
# தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
# தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு
# தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
# சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு
# நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு
# உணவு மானியத்துக்கு ரூ.8,437.57 கோடி நிதி ஒதுக்கீடு
# கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.9,370.11 கோடி ஒதுக்கீடு
# நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு
# காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி நிதி ஒதுக்கீடு
# மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு
# ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம்
# ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு
# சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி 
# நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
# அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200  கோடி ஒதுக்கீடு 
# கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
# சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,230 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு
# ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கீடு
# தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு
# தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
# வீட்டுவசதித்துறையில் உலக வங்கித் திட்டங்களுக்கு ரூ.320.40 கோடி, ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171 கோடி நிதி ஒதுக்கீடு
# தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
# ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு
# மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு
# போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750கோடி நிதி ஒதுக்கீடு
# வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி நிதி ஒதுக்கீடு
# பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடிநிதி ஒதுக்கீடு
# உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு
# மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
# சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடிநிதி ஒதுக்கீடு