1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (20:46 IST)

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்து கேட்டறிந்த பணியாளர் நல ஆணைய தலைவர்

karur
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் திரு.வெங்கடேசன்  மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்தும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை குறித்த பல்வேறு  தகவல்களையும் கேட்டறிந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் திரு.வெங்கடேசன் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு, பாதாள சாக்கடை சுத்திகரிக்கும் தானியங்கி இயந்திரம், மாநகராட்சியில் பதிவு பெற்ற மாநகராட்சிக்கு சொந்தமான மற்றும் தனியார் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு வாகனங்களுக்கு உரிமம் பெறுதல், காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டம் குறித்தும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை குறித்த பல்வேறு  தகவல்களையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கரூர் மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் அவர்கள், மாநகர நல அலுவலர் திரு.இலட்சியவர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.