C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம்- முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், இன்று C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.