1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (22:05 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை; தமிழக முதலமைச்சர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு நாளை முடிவடைய உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து  மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றது.
 
ஆனால் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை நாளை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு தமிழகத்திற்கு வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 29 ஆம் தேதியன்று  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை எனவும் மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைக்கும் என நம்பிக்கை  தெரிவித்திருக்கிறார்.