1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (18:18 IST)

கஜா புயல் நிவாரண நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு

தமிழகத்தில் கடந்த மாதம் நவம்பர்  26 ஆம் தேதி 12 டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டது. இதில் தஞ்சாவூர். திருவாரூர் நாகபட்டினம் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் பலர் விவசாய நிலங்கள், வீடு,  உட்பட அனைத்தையும் இழந்தனர்.
கஜா புயலில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவங்களும் உதவி செய்தனர். மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.15000 கோடி நிவாரண  உதவி கோரி இருந்தார்.
 
இதனையடுத்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தமிழகத்திற்கு வந்து  சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.
 
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று கூடிய உயர்மட்ட குழு கூட்டத்தில் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146.12 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.இந்த நிதி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
 
கஜாபுயல் பாதிப்பு ஏற்பட்ட சில நாளில் முதற்கட்டமாக ரூ. 353 கோடி மத்திய அரசு ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.