புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 டிசம்பர் 2018 (16:19 IST)

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் விற்றால் அபராதம், சிறைத் தண்டனை, : மத்திய அரசு எச்சரிக்கை

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் இந்தத்தடை வரும் ஆண்டு ஜனவரி 15 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐ தரச்சான்றிதல் இல்லாத ஹெல்மெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டால் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன்  2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐஎஸ் ஐ முத்திரை இல்லாத தரம் குறைவான ஹெல்மெட்டுகள் ஐநூறு ரூபாய்க்குள் தான் விற்கப்படுகிறது. ஆனால் ஐஎஸ்ஐ முத்திரை உள்ள ஹெல்மெட்டுகள் 600 முதல் பல்லாயிரக் கணக்கான ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 
இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
 
அத்துடன், வரும் ஜனவரி 15 முதல் அமலாகும் இந்த உத்தரவில் முக்கியமாக ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் ஒரு ஹெல்மெட்டுக்கான அதிகபட்ச எடையை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோவாக குறைக்கவும் வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.