திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (08:02 IST)

ஜல்லிக்கட்டு விதிமுறைகள் – இன்று நேரில் ஆய்வு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் சட்டநடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு இன்றூ நடைபெற இருக்கிறது.

தமிழக அரசு கடந்த 27 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசாணையை வெளியிட்டது. அதில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூரியில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு மீதான தடை சம்மந்தப்பட்ட பீட்டா அமைப்பின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இருக்கும்போது தமிழக அரசின் இந்த அரசாணை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இன்னும் குறுகியக் காலமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. எனவே போட்டி ஏற்பாடுகள் விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் எஸ்.பி.குப்தா தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளது. தமிழகத்தில் மூன்று நாட்கள் தங்கி இந்த குழு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது.

இதுசம்மந்தமாக குப்தா தலைமையிலானக் குழு தமிழக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இன்று சந்திக்க இருக்கிறது.