1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Yercaud face heavy flood in roads video viral

அடிச்சுட்டு போயிடும் போல..! வாகனங்களை இழுக்கும் ஏற்காடு வெள்ளம்! – வைரலாகும் வீடியோ!

Flood
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை அதிகரித்துள்ள நிலையில் ஏற்காட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களகா கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் கனமழை தொடர்ந்து வருகிறது.

இதனால் ஏற்காடு காட்டாற்றில் கடும் வெள்ளம் ஓடி வருகிறது. இதனால் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் போக்குவரத்து இடையூறை சந்தித்துள்ளது. மேலும் ஏற்காடு சாலைகளில் வெள்ளநீர் அதிகமாக ஓடுவதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீரில் அடித்து சென்று விடும் நிலை உள்ளது. இதனால் பலரும் வாகனங்களை பாதுகாப்பாக ஓரமாக ஒன்றாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஏற்காடின் சாலைகளில் வெள்ளம் ஆர்பரித்து ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலும் இல்லை: ராகுல் காந்தி