1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 24 மே 2023 (18:15 IST)

14 வது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுவன் தற்கொலை!

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில்  மாடியில் குதித்து சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 2 வது தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மலர். இவர்களுக்கு லோக் நாத் என்ற 17 வயது மகன் இருக்கிறார். இவர் 10 ஆம் முடித்துவிட்டு, 11 ஆம் வகுப்பில் சேர இருந்த நிலையில்,  அவர்  விளையாடச் சென்றது தொடர்பாக  பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், லோக் நாத் 14 வது  வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீழே குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.