தொடர்புடைய செய்திகள்
- தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக் கொலை
- காதல் திருமணம் என்ற பெயரில் மதமாற்றம்: துணை முதல்வர் குற்றச்சாட்டு..!
- ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்-100 பேர் கைது
- காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: மருமகனை வெட்டிக் கொன்று விட்டு மாமனார் சரண்
- காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற பெண் வீட்டார்!
கொலை செய்யப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம்
தூத்துக்குடியில் வெட்டிக் கொல்லப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம்(24), கார்த்திகா (20) இருவரும் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் 6 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இன்று காதல் தம்பதியின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஒரே இடத்தில் இரு வீட்டாரின் முன்னிலையில் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அடுத்த கட்டுரையில்
