1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (07:44 IST)

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

Rahul Gandhi
காங்கிரஸ் பிரமுகர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
இந்த பயணத்தின் போது, அவர் ‘ரோட்’ என்ற தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடலில் கலந்து கொள்வார் என்றும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2024 ஆம் ஆண்டு, ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடல், கலந்துரையாடல் நடத்திய நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி, பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாடல் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva