வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (09:58 IST)

காதல் திருமணம் என்ற பெயரில் மதமாற்றம்: துணை முதல்வர் குற்றச்சாட்டு..!

Love
காதல் திருமணம் என்ற பெயரில் அதிக மதமாற்றம் நடைபெறுவதாக மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிராவில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் காதல் திருமணத்தால் மதமாற்றம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநில அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக காணாமல் போன நபர்களின் எண்ணிக்கை 90% குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் விரைவில் மதமாற்ற தடை குறித்த சட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva