வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (12:02 IST)

திமுகவின் 75வது வருட விழா.. ஒவ்வொரு வீட்டிலும் கொடி பறக்கட்டும்: முதல்வர் ஸ்டாலின்

Stalin
திமுகவின் 75வது வருட நிறைவு விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் திமுக கொடி பறக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே, கழகத்தின் பவள விழாவை ஒட்டி வீடுகள் தோறும் நமது நிறுவன கொடியை ஏற்றிடுவேர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
தந்தை பெரியாரின் கொள்கைகளை, சட்டங்களை, திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திமுக என்னும் அரசியல் பேரியக்கம், தனது பவள விழா நிறைவினை கொண்டாடுகிறது. இதை ஒட்டி கழக கொடிகள் கொடிக்கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் கழகத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இரு வண்ண கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறந்திட செய்திட வேண்டும் என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வீதிகள் தோறும் பறக்கும் நம் நிறுவன கொடி நம் வீடுகள் தோறும் பறந்திட வேண்டும் என்றும் கழக கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்றும் வகையில் நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கழக கொடி ஏற்றிட கொண்டாடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran