வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (16:36 IST)

’இந்த பிரச்சனைக்கு ’ காரணமே அதிமுக தான் - துரைமுருகன், கனிமொழி அதிரடி

தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்குக் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுகிறது தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை அடைந்து வருகிறது. நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சமைக்க வழியில்லாமல் பலர் உணவகங்களையே இழுத்து மூடிவிட்டார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ட் தட்டுப்பாட்டுக்குக் காரணமே அதிமுக அரசு தான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவ முழுமுதற்காரணம் ஆளும் அதிமுகதான். முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா ஆட்சி செய்த 5 ஆண்டுகாலம். தற்போது 3 ஆண்டுகள் என இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் அதிமுக அரசு குடிநீருக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
 
அதேபோல் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது :
 
தமிழ்நாட்டில் தற்போது எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குத் தீர்வு காண அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை. மேலும், திமுக ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பல முடிவுறாமல் பாதியிலேயே உள்ளது. அதை நிறைவேற்றினாலேயே தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்தார்.