வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (11:01 IST)

தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா... தலைமையேற்க வாருங்கள்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் போஸ்டர் யுத்தம்!!

தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாருங்கள் என தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுகவை சேர்ந்த ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை குறித்து பேசியது கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அதிமுக ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
அதோடு, அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கட்சி தலைமை எச்சரித்தது. இந்நிலையில் பேசதான் கூட்டாது போஸ்டர் ஒட்டிவோம் என ஆதரவாளர்கள் களமிறங்கியுள்ளார்கள் போலும்... 
ஆம், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் ‘அம்மா மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ஈபிஎஸ்-க்கு சென்னையில் போஸ்டர்களும், செங்கோட்டையனுக்கு சிவகங்கையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்ட துவங்கியுள்ளனர்.