1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (09:06 IST)

தேர்தலில் ஜெயித்து விட்டு கட்சி மாறினால் வெட்டுவேன்… அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு!

அதிமுகவின் சாத்தூர் பகுதி ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி கடந்த வாரம் பேசிய சர்ச்சை பேச்சை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் சம்மந்தமாக கடந்தவாரம் சாத்தூர் பகுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர்களில் ஒருவரான சண்முகக்கனி கலந்துகொண்டு பேசினார்.

அதில் ‘அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன். உங்கள் மேல் விழும் முதல் வெட்டு என் வெட்டாக தான் இருக்கும். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன்.’ எனப் பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் மிரட்டும் விதமாக பேசிய சண்முகக்கனி மீது போலிஸார் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளார்.