1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஏப்ரல் 2018 (15:25 IST)

மோடி மீது எடப்பாடிக்கு எவ்வளவு பயம்! - கலாய்த்த தங்கதமிழ்ச்செல்வன்

உண்ணாவிரத மேடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்ச்சாமி, பாஜகவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமையாத விவகாரத்தில் திமுகவை மட்டுமே குறை கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பற்றி அவர் எதுவும் விமர்சிக்கவில்லை.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ “அந்த மேடையில் எடப்பாடி பேசியதை பார்க்கும் போது அவர் மோடிக்கு எவ்வளவு பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில், அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்தாரே தவிர பாஜகவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என அவர் தெரிவித்தார்.