திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (09:06 IST)

திமுகவில் இணையும் ஐடியா...? தங்க தமிழ்செல்வன் ஓபன் டாக்!

தங்க தமிழ்செல்வன் திமுக-வில் இணையபோவதாக வெளியான செய்திக்கு அவர் பதில் அளித்துள்ளார். 
 
சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். இதில் தவறில்லை தங்க தமிழ்செல்வன் எதார்த்தத்தை பேசுகிறார் என டிடிவி தினகரனும் குறிப்பிட்டிருந்தார். 
 
இதன் பிறகு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயலகளை செய்துகொண்டு இருக்கிறார். அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார் என்றே நினைக்கிறேன் என தெரிவித்து சர்ச்சையை உண்டாக்கினார். 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் தங்க தமிழ்செல்வன். அவர் கூறியுள்ளதாவது, திமுகவில் நான் இணையப்போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. திமுக என்றுமே எங்களுக்கு எதிரி, எடப்பாடி பழனிச்சாமி துரோகி என கூறினார். மேலும், தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது. இதை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.