புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (13:20 IST)

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப்போகிறார் – செல்லூர் ராஜு கிளப்பிய பீதி !

அமமுகவில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் திமுக வில் இணையப் போவதாக  அதிமுக வின் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ ‘ தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு பக்கத்தில் இருந்துகொண்டே அவருக்கு எதிரான செயலகளை செய்துகொண்டு இருக்கிறார். அவர் திமுகவுக்கு செல்ல இருக்கிறார் என்பதையே அவரது பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜியைப் போல அவரும் திமுக நோக்கி செல்வார் என்றே நினைக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.