திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 செப்டம்பர் 2018 (19:40 IST)

பாஜக அரசை எதிர்க்கும் திராணி மு.க.ஸ்டாலினிடம் இல்லை: திமுகவை சாடிய தம்பித்துரை

மத்திய அரசினை எதிர்க்கும் திராணி ஸ்டாலினுக்கு கிடையாது என்று அதிமுக அமைச்சர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கருங்கல்பட்டி, ஜமீன் ஆத்தூர் காலனி, வல்லப்பம்பட்டி, சாமிநாதபுரம், அம்மாபட்டி, சங்கரணாபட்டி, கணவாய், கடம்பங்குறிச்சி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் மக்களவை உறுப்பினருமான தம்பித்துரை மக்களிடம் மனுக்களை கேட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியதாவது:-

பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணமே, இன்றைய மத்திய அரசும், முந்தைய மத்திய அரசும் தான் என்றதோடு, வெளிநாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு பெட்ரோல் கொண்டு வரும்போது எக்ஸைஸ் தொகை, கலால் வரி மட்டுமில்லாது செஸ் வரி என்பதை மட்டுமில்லாமல் விலை நிர்ணயிக்கும் உரிமையை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாகவும், முந்தைய காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் மத்திய அரசிடமும், தற்போதைய பா.ஜ.க அரசும், அதே கொள்கையை எடுத்துள்ளதாலும், மாநில அரசுகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி என்ற வரி வந்த பிறகு முழுக்க, முழுக்க, நேரிடையாக வரியானது மத்திய அரசிற்கே சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, பா.ஜ.க கட்சி சொல்வது போல, இந்த பெட்ரோல் விலை உயர்விற்கு காரணம் மாநில அரசு அல்ல, மத்திய அரசின் வரி விதிப்பு தான்,

மேலும், தி.மு.க கட்சியானது, பா.ஜ.க கூடவே கூட்டணி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது நான் (தம்பித்துரை) ஏற்கனவே சொன்னது போல, தி.மு.க வை பொறுத்தவரை, பா.ஜ.க வுடன் நல்ல இணக்கத்தினை வைத்துள்ளதோடு., தற்போது பா.ஜ.க அரசிற்கு எதிரான பாரத் பந்தில் அதிக அளவில் அக்கறை காட்டவில்லையே, ஆகவே, மாநில அரசிற்கு எதிரான போராட்டங்கள் என்றால், பஸ்ஸை கல்லைவிட்டு எரிந்து நொறுக்குவார்களே, தவிர தற்போது மத்திய அரசினை எதிர்க்கும் திராணி ஸ்டாலினுக்கு கிடையாது,

வெறும் அறிக்கை மூலம்தான் ஸ்டாலின் எதிர்ப்பை காட்டுகின்றார் என்றதோடு, ஆகவே, தி,மு.க விற்கு   பாரத ரத்னாவா, பார்த் பந்தா என்று ஏற்கனவே நான் சொல்லியது போல, அவர்கள் எந்த மனநிலையிலும் பாரத் பந்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.