வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (12:21 IST)

மஞ்சள் சால்வை போர்த்தி; திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்!!

அமமுகவில் இருந்து விலகி சற்று முன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்செல்வன்.
 
தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். 
 
ஏற்கனவே அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் செந்தில் பாலாஜி மற்றும் வி.பி.கலைராஜன் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இவர்கள் வரிசையில் தங்க தமிழ்ச்செல்வனும் இணைய உள்ளார். 
 
ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கியும், மஞ்சள் சால்வை அணிவித்தும் இருவரும் சிரித்தப்படி கை குலுக்கினர். தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்கலும் திமுகவில் இணைந்தனர்.