ஓபிஎஸ் கோட்டையை தகர்க்க திமுக ரெடி!! டாஸ்க்கை முடித்த செந்தில் பாலாஜி?

Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (09:58 IST)
தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், இதற்கு பின்னணியில் செந்தில் பாலாஜி வெற்றிமுகம் உள்ளதாம். 
 
விவரம் தெரிந்த நாள் முதல் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் இணைய விருப்பமில்லை என்றுதான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார்.  
 
ஆனால் அதிமுகவில் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதாலும், அதிமுகவில் இணைய ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் வேறு வழியின்றி திமுகவில் இணைய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வனை திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜி முழு மூச்சோடு செயல்பட்டதகாவும் அதற்கு தற்போது கிட்டத்தட்ட வெற்றி கிடைத்து விட்டதகாவும், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணையும் பட்சத்தில் தேனியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனவும், ஓபிஎஸ்-க்கு எதிரான அஸ்திரமாக தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :