எதிர்கட்சியினரை ஊட்டி வளர்க்கும் திமுக; சொந்த கட்சியினருக்கு ஓர வஞ்சனை??

Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (10:35 IST)
எதிர்கட்சியினருக்கு ஆதரவு கொடுப்பதால், சொந்த கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அதிமுக, அமமுகவில் இருந்து விலகுவோரை கட்சிக்குள் இணைத்துக் கொண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொந்த கட்சியினரின் அதிருப்தியை கட்சி தலைமை சம்பாதித்து வருவதாக தெரிகிறது. 
 
எதிர்கட்சியினருக்கு ஆதரவு தரும் போக்கு என்பது திமுகவிற்கு புதிது அல்ல இது கருணாநிதி காலத்திலேயே துவங்கிவிட்டது. சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ.வேலு என துவங்கிய இந்த ஆதரவு தற்போது செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் என தொடர்ந்து வருகிறது. 
 
செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து சென்றவர் என்றாலும், எதிர்கட்சியில் இருந்துவிட்டுதான் வந்துள்ளார். செந்தில் பாலாஜி வந்த வேகத்தில் அவருக்கு பதவி கொடுக்கப்பட்டு, தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது திமுக எம்.எல்.ஏவாக உள்ளார். 
இதேபோல் தற்போது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையுள்ளார் என செய்திகல் வெளியாகும் நிலையில், அவர் கட்சியில் இணைந்தால் அவருக்கு தேனியில் எப்படியும் முக்கிய பதைவியும் பொறுப்புகளும் கொடுக்கப்படும். அப்படி என்றால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஒவ்வொரு எதிர்கட்சியினரையும் திமுக அறவணைப்பதால், சொந்த கட்சிகாரர்களின் அதிருப்தி அதிகத்து வருகிறது. இன்று இல்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் திமுகவில் இது பிரச்சனையாக உருவெடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :