தங்க தமிழ்செல்வனுக்கு எண்ட் கார்ட்; பதவிகள் பறிக்கப்படும்: டிடிவி அதிரடி!
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்தே கருத்துவேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரின் பிரச்சனைகள் சந்திக்கு வந்துள்ளது.
தங்கதமிழ்ச்செல்வனின் ஆடியோ வெளியாகிய நிலையில் பதில் அதிரடியாக டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
டிடிவி தினகரன் கூறியதாவது, எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாடிக்கை. அமமுகவின் போக்குவரத்து பிரிவு செயலாளரிடம் தங்க தமிழ்செல்வன் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் விரைவில் நீக்கப்படுவார். அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயலாளர், அமமுக கொள்கை பரப்பு செய்லாளர் ஆகிய பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவார். சசிகலாவிடம் பேசிவிட்டு விரைவில் புதிய நிர்வாகிகள் அமைக்கப்படுவார்கள்.
அவர் இதற்கு முன்னர் தந்தி டிவியில் பேட்டி அளித்த போது நான் அவரை கண்டித்தேன். இப்போது புதியதலைமுறைய்டம் தொலைபேசி வாயிலாக பேசிய தங்க தமிழ்செல்வன் அமமுக தலைமையை விமர்சித்திருக்கிறார். தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என தெரிவித்தார்.