1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thanga Tamil Selvan intrested in joining with ADMK

அதிமுகவுடன் இணைய தயார்: தங்க தமிழ்செல்வன் தடாலடி

தமிழகம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடத்தி வந்தாலும், அண்டஹ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவும், தினகரனின் தலைமையில் அமமுக கட்சியும் செயல்பட்டு வருகிறது. 
 
அதிமுகவும், அமமுகவும் மாறி, மாறி தங்களது அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக கட்சியின் கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் அதிமுகவுடன் இணைய தயார் என தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, புதிய தலைமையை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேரவேண்டும். 
 
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுகவிற்கு வரட்டும் என்றும் கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மீண்டும் முதல்வராகும் சந்திரசேகர ராவ்? பாஜக ஆதரவு கரம்!