தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நெல்லை விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை
தமிழகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன்னர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணைக்கு இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அதேபோல் நெல்லையிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இதனை அடுத்து வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லைக்கு விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன