தொடர்புடைய செய்திகள்
- ஓரினச்சேர்க்கைல என்ன தப்பு இருக்கு? கலாச்சாரமாவது, எதாவது: சீறும் இளம் நடிகை
- ரஜினியின் கருத்துக்கு இளையராஜா மறுப்பு
- ராமதாஸ்- அன்புமணி கருத்து வேறுபாடு ; கூட்டணியால் பா.ம.க. வில் குழப்பம் ?
- பிரதமர் வாஜ்பாய் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்: அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு
- நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சருடன் குழந்தை போல் விளையாடிய கனிமொழி எம்பி
தம்பிதுரைக்கு கொக்கி போடும் திமுக? கனிமொழியால் கசிந்த உண்மை
தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர் என தம்பிதுரையை கனிமொழி புகழ்ந்து பேசியுள்ளார்.
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
இதோடு மட்டுமல்லாமல் கட்சிக்குள் உள்ள அதிருப்தி காரணமாக தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்க இருப்பதாகவும், திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கமளித்த தம்பிதுரை, பாஜகவின் கொள்கைகள் சில சரியாக இல்லாததால் தான் பாஜகவை விமர்சிக்கிறேன். அதிமுகவின் எம்எல்ஏக்களை பாஜக கிள்ளுக்கீரை போல் நினைக்கிறது. எங்கள் கட்சி நபர்களை பாஜகவினர் ஒழுங்காக நடத்துவதில்லை. அதனால் தான் அவர்களை விமர்சிக்கிறேன் என கூறினார்.
மத்திய பாஜக அரசு தற்பொழுது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக தமிழகத்திற்கு இதுவரை ஒன்னும் செய்யவில்லை எனவும், பாஜக தமிழகத்தை அழிவை நோக்கி கொண்டு செல்லப்பார்க்கிறது எனவும் கூறினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர் தம்பிதுரை. பாஜகவை பற்றி தம்பிதுரைக்கு தற்போது தெரிந்துவிட்டது. அதேபோல் அங்குள்ள மற்றவர்களுக்கு இது தெரியவரும் என கூறினார். ஏற்கனவே தம்பிதுரை திமுகவில் இணைய இருக்கிறார் என வதந்தி கிளம்பிவரும் நிலையில் கனிமொழி இப்படி கூறியிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
