1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (09:34 IST)

ஓரினச்சேர்க்கைல என்ன தப்பு இருக்கு? கலாச்சாரமாவது, எதாவது: சீறும் இளம் நடிகை

ஓரினைச்சேர்க்கையால் தவறு ஏதும் இல்லை என நடிகை ரெஜினா கருத்து தெரிவித்துள்ளார்.
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசாண்ட்ரா. அதன்பிறகு  கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி  சிங்கம், மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் ஷெல்லி சோப்ரா தர் இயக்கத்தில் அனில் கபூர், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா' படத்தில் ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்தில் ரெஜினா கஸன்ட்ரா ஒரு லெஸ்பியனாக நடித்திருக்கிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய அவர் ஓரினச்சேர்க்கையில் என்ன தவறு இருக்கிறது. அது அவரவரின் சுதந்திரம். எனக்கு ஓரினச்சேர்க்கை நண்பர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு கலாச்சாரம், ஒழுக்கம் என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என அவர் கூறினார்.