புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (13:43 IST)

நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சருடன் குழந்தை போல் விளையாடிய கனிமொழி எம்பி

நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் இந்தியாவின் அனைத்து மாநில எம்பிக்களும் தவறாமல் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருந்தபோது கிடைத்த மதிய உணவு நேரத்தில் பெண் எம்பிக்கள் குழந்தைகள் போல் நாடாளுமன்ற வளாகத்தில் விளையாடினர்.
 
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் கைகோர்த்து விளையாடி மகிழ்ந்தனர். இதனை பிற பெண் எம்பிக்களும், பார்வையாளர்களும் புகைப்படம், வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர்.
 
வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு கொள்கைகளை கொண்டவராக இருந்தாலும் ஒற்றுமையுடன் பெண் எம்பிக்கள் விளையாடியதை ஆண் எம்பிக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.