வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:42 IST)

அப்போ பாஜக, இப்போ பாமக: டார்கெட்டை மாற்றிய தம்பிதுரை

தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக - பாமக கூட்டனி உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியால் பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்த விமர்சனங்கள் குறித்து தம்பிதுரை பேசியுள்ளார். 
 
தம்பிதுரை கூறியதாவது, திமுக, காங்கிரஸ் கூட்டணி என்பதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
 
எங்களது பொது எதிரியான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதில் அதிமுக மீது எந்த தவறும் இல்லை. 
 
அதேபோல கூட்டணிக்கான கொள்கைகளை அதிமுக விட்டு கொடுக்கவில்லை. மத்திய அரசுடன் இணைந்தால் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரலாம் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 
மறுபுறம் அதிமுக - பாமக கூட்டணி குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் அதிமுக மீதும் அமைச்சர்கள் மீது பாமக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அரசியலுக்காக அப்போது கூறியிருக்கலாம்.
 
அதிமுக மீதோ, அதன் அமைச்சர்கள் மீதோ எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என முழு நம்பிகையுடன் பேசியுள்ளார் தம்பிதுரை.